Sunday 20 May 2018

பிளஸ் 2 மாணவர்களுக்கு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்

பிளஸ் 2: இன்று முதல் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் பெறலாம்




பிளஸ் 2 பொதுத்தேர்வெழுதிய மாணவர்களுக்கு திங்கள்கிழமை முதல் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படவுள்ளது.  பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் புதன்கிழமை (மே 16) வெளியிடப்பட்டன. 

மாணவர்கள் பள்ளியில் பதிவு செய்திருந்த செல்லிடப்பேசி எண்களுக்கு மதிப்பெண்களுடன் தேர்வு முடிவுகள் அனுப்பி வைக்கப்பட்டன. இந்த நிலையில், மாணவர்கள் கல்லூரிகளில் சேரும் வகையில் அவர்களுக்கான தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் திங்கள்கிழமை முதல் வழங்கப்படவுள்ளது. 

பள்ளி மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளியின் தலைமை ஆசிரியர் மூலமாகவும், தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வெழுதிய மையத்தின் மூலமாகவும் திங்கள்கிழமை முதல் தற்காலிக மதிப்பெண் சான்றிதழைப் பெற்றுக் கொள்ளலாம். 

மேலும், திங்கள்கிழமை பிற்பகல் முதல் பள்ளி மாணவர்களும், தனித் தேர்வர்களும் அரசு தேர்வுத் துறையின் இணையதளத்தில் (www.dge.tn.nic.in) தங்கள் பதிவெண், பிறந்த தேதியைக் குறிப்பிட்டும் இச்சான்றிதழை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Tuesday 15 May 2018

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியீடு இன்று

ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று வெளியாகின்றன.




கடந்த மார்ச் 1-ந் தேதி தொடங்கிய ப்ளஸ் 2 தேர்வுகள் ஏப்ரல் 6-ந் தேதி முடிவடைந்தது. இதனை தமிழ்நாடு, புதுச்சேரியில் தனித்தேர்வர்களுடன் சேர்த்து 9 லட்சத்து 7 ஆயிரத்து 620 மாணவ, மாணவிகள் எழுதினார்கள். இதையடுத்து, விடைத்தாள் திருத்தும் பணிகள் முடிவடைந்தன. பின்னர், மதிப்பெண்களை கம்ப்யூட்டர்களில் பதிவேற்றம் செய்யும் பணி நடைபெற்றது. 

தொடர்ந்து மதிப்பெண்கள் சரிபாக்கும் பணியும் நடைபெற்றது. எல்லாம் முடிவடைந்த நிலையில் இன்று காலை 9.30 மணிக்கு ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியிடப்படுகின்றன.


www.dge.tn.nic.in, 

www.dge.tn.gov.in 

ஆகிய இணைத்தளங்களில் தேர்வு முடிவுகளை பதிவு இறக்கம் செய்து கொள்ளலாம் என்றும் அல்லது மேற்கண்ட இணையதளங்களுக்கே சென்று தேர்வு முடிவினை அறிந்துகொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Saturday 12 May 2018

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வரும் மே 16 ல்

மே 16-இல் பிளஸ் 2 தேர்வு முடிவுகள்

தமிழகம், புதுச்சேரியில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வரும் புதன்கிழமை (மே 16) காலை 9.30 மணிக்கு வெளியிடப்படவுள்ளது. 

 9 லட்சம் மாணவர்கள்: 

தமிழகம், புதுச்சேரியில் பிளஸ் 2 பொதுத் தேர்வு கடந்த மார்ச் 1 முதல் ஏப். 6-ஆம் தேதி வரை நடைபெற்றது. இத்தேர்வை 6 ஆயிரத்து 903 மேல்நிலைப்பள்ளிகளைச் சேர்ந்த 8 லட்சத்து 66 ஆயிரத்து 934 மாணவ-மாணவியர், 40 ஆயிரத்து 686 தனித்தேர்வர்கள் என மொத்தம் 9 லட்சத்து 7, 620 பேர் எழுதினர். 

 பெற்றோர், மாணவர்களுக்கு... 

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் கடந்த ஆண்டைப் போலவே மாணவர்கள் பதிவு செய்துள்ள செல்லிடப்பேசி எண்ணுக்கு குறுஞ்செய்தி மூலம் அனுப்பப்படும். பள்ளியின் மின்னஞ்சல் முகவரிக்கு நேரடியாக அட்டவணைப் படுத்தப்பட்ட பிளஸ் 2 மதிப்பெண் பட்டியலை அனுப்பவும் தேர்வுத் துறை திட்டமிட்டுள்ளது. 

ஆன்லைன் முறை ஏன்?

 அரசுத் தேர்வுத் துறை இயக்கத்தின் அனைத்துச் செயல்பாடுகளும் ஆன்லைன் முறையில் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தேர்வு முடிவுகளை முன்கூட்டியே எந்தப் பள்ளியும் அறிந்து கொள்வதைத் தடுக்கும் வகையில் இந்த ஆண்டு முதல் ஆன்லைன் மூலம் அட்டவணைப்படுத்தப்பட்ட மதிப்பெண்கள் அடங்கிய பட்டியலை பள்ளிகளுக்கு அனுப்பும் புதிய முறையை அரசுத் தேர்வுத் துறை இயக்ககம் அறிமுகம் செய்துள்ளது. 

ஊடகவியலாளர்களுக்கு... 

தேர்வு தொடர்பான புள்ளி விவரங்கள் அடங்கிய பகுப்பாய்வு அறிக்கை ஊடகவியலாளர்களுக்கு இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளும் புதிய முறையை இந்தாண்டு முதல் தேர்வுத் துறை அறிமுகப்படுத்தவுள்ளது.

Thursday 3 May 2018

மின்கட்டணம் இனி எளிதாக கட்டலாம்

மின் கட்டணம் செலுத்த புதிய செயலி அறிமுகம்

‘நேஷனல் பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா’ அனைத்து விதமான கட்டணங்களையும் எளிதில் செலுத்த ‘பாரத் பில்பே’ என்ற செயலியை அறிமுகப்படுத்தியது. 



இந்த சேவையில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் வாயிலாக தமிழ்நாடு மின்சார வாரியம் கைகோர்த்து இருக்கிறது. இதன் மூலம் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் 2.79 கோடி பேர் மிக எளிமையான முறையில் தங்களுடைய மின்சார கட்டணத்தை செலுத்த முடியும்.கட்டணம் செலுத்தியதை உறுதிப்படுத்தும் வகையில் பாரத் பில்பேயின் அடையாள முத்திரையுடன் கூடிய குறுஞ்செய்தி மூலமாகவோ, மின்னஞ்சல் மூலமாகவோ அல்லது அச்சிடப்பட்ட ரசீது மூலமாகவோ தகவல் அனுப்பப்படும். 





இதுகுறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் நிதி இயக்குனர் மனோகரன் கூறுகையில், ‘பாரத் பில்பே மூலம் இனி மின்சார வாரியத்தின் வாடிக்கையாளர்கள் மிகவும் எளிமையான முறையில் தங்களுடைய மின்சார கட்டணத்தை பாதுகாப்பாக செலுத்த முடியும். இது அவர்களது நேரத்தையும், கட்டணம் செலுத்த மேற்கொள்ளும் போக்குவரத்துக்கான செலவையும் மிச்சப்படுத்த உதவும்’ என்றார்.

மாணவர்களுக்கு 11 விதிமுறைகள்

*மாணவர்களுக்கு 11 விதிமுறைகளை பள்ளி கல்வித்துறை அதிரடியாக அறிவித்தது.*



மாணவர்கள் முறுக்கு மீசை, காதில் கடுக்கன் அணிவது கூடாது. பிறந்த நாளானாலும் சீருடையில்தான் வரவேண்டும்’ என பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

கல்லூரி மாணவர்களை போலவே, மேல்நிலை பள்ளி மாணவர்களும் முறுக்கு மீசை, காதில் கடுக்கன், ‘லோ ஹிப்’ பேன்ட், சீரற்ற முறையில் முடிவளர்த்து பள்ளிகளுக்கு வர ஆரம்பித்தனர். மேலும், பள்ளி நிர்வாகங்களுக்கு தெரியாமல் ஸ்மார்ட் போன்களை பயன்படுத்துகின்றனர். இதையடுத்து பள்ளிக்கு வரும் மாணவ, மாணவியர்கள் 11 விதிமுறைகளை கட்டாயமாக கடைபிடிக்க வேண்டும். முதன்மை கல்வி அலுவலர்கள் இதனை கண்காணிக்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

*கல்வித்துறையின் 11 விதிமுறைகள்:*

* காலை 9.15 மணிக்குள் பள்ளிக்கு வந்து சேர வேண்டும்.

* லோ ஹிப், டைட் பிட் ‘பேன்ட்’கள் அணிந்து வர அனுமதி இல்லை.

* அரைக்கை சட்டை மட்டுமே அணிய வேண்டும். சட்டையை இறுக்கமாக அணியக்கூடாது

* மாணவர்கள் அணியும் சட்டை நீளம் ‘டக் இன்’ செய்யும்போது வெளியில் வராத வகையில் இருக்க வேண்டும்.

* சீரற்ற முறையில் ‘இன்’ பண்ண கூடாது. கறுப்பு கலர் சிறிய ‘பக்கிள்’ கொண்ட பெல்ட் மட்டுமே அணிய வேண்டும்.

* கை, கால் நகங்கள், தலை முடி சரியான முறையில் வெட்டப்பட (போலீஸ் கட்டிங்) வேண்டும்.

* மேல் உதட்டை தாண்டாதவாறு மீசை இருப்பது அவசியம். முறுக்கு மீசை வைத்திருந்தால் கடும் நடவடிக்கை பாயும்.

* கைகளில் ரப்பர் பேண்டு, கயிறு, கம்மல், கடுக்கன், செயின் போன்றவற்றை அணிந்து வரக்கூடாது.

* பெற்றோர் கையொப்பத்துடன் வகுப்பாசிரியர் அனுமதி பெற்றுத்தான் விடுமுறை எடுக்க வேண்டும்.

* பைக், செல்போன், ஸ்மார்ட் போன் கொண்டு வர அனுமதி இல்லை. மீறினால் பறிமுதல் செய்யப்படும்.
திரும்ப ஒப்படைக்கப்பட மாட்டாது.

* பிறந்த நாள் என்றாலும் மாணவர்கள் சீருடையில் தான் பள்ளிக்கு வர வேண்டும்.

இவ்வாறு விதிகள் வகுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தலைமை ஆசிரியர் ஒருவர் கூறுகையில், ‘மாணவர்களின் ஒழுக்க நெறிமுறைகளை வளர்த்தெடுப்பதில் பள்ளிகள் பெரும்பங்கு வகிக்கின்றன. இதற்கான 11 விதிமுறைகள் குறித்து ‘பிளக்ஸ் பேனர்’கள் பள்ளிகளில் வைக்கவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. துண்டு பிரசுரங்கள் மூலமும், பெற்றோரிடமும் விழிப்புணர்வு ஏற்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார்.

Monday 30 April 2018

புதிய பாடத்திட்டம் அறிமுகம்

9,10,11,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அனைத்து பாடத்திட்டமும் கணினிமயமாக்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்

தமிழக அரசின் பள்ளி கல்வித்துறையில் புதிய பாடத்திட்டம் கொண்டு வரப்படுவதாக அறிவித்த நிலையில் , தற்போது  1,6,9 மற்றும் 11 ஆகிய வகுப்பு மாணவா்களுக்கான புதிய பாடத்திட்டங்களை முதலமைச்சர் பழனிசாமி அவா்களால் நாளை மறுநாள் வெளியிடும் என்று தற்போது அறிவித்துள்ளனா்.

முதல்கட்டமாக, 1 மற்றும் 9-ம் வகுப்புக்கான தமிழ், ஆங்கில பாடங்கள் அடங்கிய பாடநூல்களின் முதல் பாகம் முழுமையாக முடிக்கப்பட்டு இருந்த நிலையில் தற்போது அனைத்து பாடமும் முடிக்கப்பட்டு வெளியிடப்பட உள்ளது என்று அமைச்சா் செங்கோட்டையன் அறிவித்துள்ளாா். 

பாடத்திட்டத்தின் புத்தக வடிவமைப்பினை சிறப்பான முறையில் உருவாக்க அரசு நடவடிக்கை மேற்கொண்டு வந்தது.  பின்னா்  விலை உயர்ந்த காகிதத்தில் புத்தகம் உருவாக்கப்பட்டுள்ளது என்றும் பாடப்புத்தகத்தை மாணவர்கள் சுமந்து செல்லக்கூடாது என்ற வகையில் 3 கட்டங்களாகவும் பிரித்து வைத்து வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் உயா்நிலை படிக்கும் 9,10,11,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அனைத்து பாடத்திட்டமும் கணினிமயமாக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகம்  கல்வியில் சிறந்து விளங்கும் முதன்மையான மாநிலமாக திகழும் என்று கூறினாா்.

Saturday 28 April 2018

இனி எட்டாம் வகுப்பு வரை ஆன்லைன் தேர்வு அறிமுகம்

8-ம் வகுப்பு வரை ஆன்லைன் தேர்வு முறை : பள்ளிக்கல்வித்துறை புதிய முயற்சி

 8ம் வகுப்பு வரை ஆன்லைன் தேர்வு முறையை நடைமுறைப்படுத்த பள்ளிக்கல்வித்துறை முயற்சி மேற்கொண்டுள்ளது.

தமிழக பள்ளிக்கல்வித்துறையில் வரும் கல்வி ஆண்டில் முதல் வகுப்பு, 6ம் வகுப்பு, 9 மற்றும் பிளஸ் 1 வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டம் நடைமுறைக்கு வருகிறது. இவற்றில் பிளஸ் 1 தவிர மற்ற வகுப்புகளுக்கு முதல் பருவத்துக்கான பாடப்புத்தகங்கள் அச்சடிக்கப்பட்டு, மாவட்டவாரியாக பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. 

ஜூன் 1ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டு அன்றைய தினமே பாடப்புத்தகங்கள் மாணவர்களுக்கு வழங்கப்பட உள்ளது. இந்நிலையில் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஆன்லைன் தேர்வு முறையை நடைமுறைப்படுத்த பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளது. 

இப்புதிய முயற்சியை செயல்படுத்துவதற்கான வழிமுறைகளை புதிய பாடத்திட்டங்களை வடிவமைத்தக்குழுவே தயாரித்து வழங்கியுள்ளது. அதன்படி ஆன்லைன் தேர்வுமுறைக்கு ஏற்ப புதிய பாடப்புத்தகங்களில் கேள்விகளும் இணைக்கப்பட்டுள்ளன. 

இதையடுத்து வரும் கல்வி ஆண்டில் முதல்கட்டமாக 5ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ஆன்லைன் தேர்வுமுறை அறிமுகப்படுத்தப்பட உள்ளது. அதற்கேற்ப தமிழக அரசுப்பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்புகள் முழுமையாக தொடங்கிய பின்னர் தொடக்கப்பள்ளியில் அனைத்து வகுப்புகளுக்கும் ஆன்லைன் தேர்வுமுறை நடைமுறைப்படுத்தப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
********************

Friday 27 April 2018

IAS தேர்வு முடிவுகள் வெளியீடு

ஐ.ஏ.எஸ் தேர்வு முடிவு மத்திய தேர்வாணையம் வெளியீடு

ஐ.ஏ.எஸ் தேர்வு முடிவுகளை மத்திய தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. 

13 ஆயிரம் பேரில் 2,567 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். நேர்முகத் தேர்வில் பங்கேற்ற 2,567 பேரில் 990 பேர் ஐ.ஏ.எஸ்,ஐ.பி.எஸ், ஐ.எப்.எஸ் பணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 



கடந்த 2017 க்கான யு.பி.எஸ்.சி தேர்வு முடிவுகள் www.upsc.gov.in என்ற முகவரியில் காணலாம்.

விரைவில் இலவச ஐஏஎஸ் அகாடமி

தமிழகம் முழுவதும் அரசு சார்பில் ஐஏஎஸ் அகாடமிகள் இன்னும் 2 மாதங்களில் தொடங்கப்படும்: அமைச்சர் செங்கோட்டையன்

தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் அரசு சார்பில் ஐஏஎஸ் அகாடமிகள் இன்னும் 2 மாதங்களில் தொடங்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

திருச்சி மாவட்ட கல்வித்துறை, பொது நூலக இயக்ககம் சார்பில் நூலகங்கள் மற்றும் வாசகர்கள் வட்ட தலைவர்கள் கருத்தரங்கு மாவட்ட மைய நூலகத்தில் நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய அமைச்சர் செங்கோட்டையன் தமிழக மாணவர்களின் நலனை மனதில் கொண்டு ஐஏஎஸ் அகாடமிகள் தொடங்கப்படும் என்று கூறியுள்ளார்.

மேலும் விடுமுறை தினங்களில் வகுப்புகள் நடத்தும் தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.

10, 11,12 மாணவர்கள் இனி புதிய பாடத்திட்டத்தில் தான் தேர்வு எழுத முடியும்

மாணவர்கள் இனி புதிய பாடத்திட்டத்தில் தான் தேர்வு எழுத முடியும்